Your cart is empty.
எல். செல்லம்மாள்
பிறப்பு: 1920 - 2016
செல்லம்மாள் (பி.1920 - 2016) செல்லம்மாள் 1920இல் திருவனந்தபுரத்தில் உள்ள கரமனையில் பிறந்தார். பன்னிரண்டு வயதில், எட்டாவது படிக்கும்போது சிதம்பரகிருஷ்ணனுக்கு மனைவியானதும் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வயதுக்கு வந்ததும் நாகர்கோவிலில் உள்ள வடிவீசுவரத்தில் தன் புக்ககத்துக்குக் கணவனுடனும் புக்ககத்தாருடனும் வாழ வந்தவர், பதினாறாவது வயதில் முதல் குழந்தைக்கும் தன் நாற்பதாம் வயதில் கடைசிக் குழந்தைக்கும் தாயானார். எண்பது ஆண்டுகள் அதே வீட்டில் வாழ்ந்து ஜனவரி 2016இல் தன் 95ஆவது வயதில் மறைந்தார். 1995இல் கணவர் மறைவுக்குப் பின்பும் அந்த வீட்டில் தனியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதையே விரும்பினார். தன்னிச்சைப்படி செயல்படுவதையே விரும்பினார். அதன்படியே இறந்தபின் தன் கண்களைத் தானம் செய்யும் முடிவையும் எடுத்தார். செல்லம்மாள் சுபாவத்தில் மென்மையானவர். வெளிப்படையாக உணர்ச்சிகளைக் காட்டாதவர். தமிழ் நாவல்களையும் பத்திரிகைகளையும் மிகவும் ஆர்வமாகத் தொடர்ந்து வாசித்துத் தானும் எழுத முயன்றவர். கோவில்களுக்குப் போவதிலும் மதச் சடங்குகளிலும் செல்லம்மாள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. தான் சுயமாகச் சிந்திக்கக்கூடியவள் என்பதில் அவருக்கு அதிகம் பெருமிதம் இருந்தது. அதைத் தன் குடும்பமோ மற்றவர்களோ பாராட்டவில்லை என்ற மனக்குறை இருந்தது. இசையில் அதிகம் ஈடுபாடு கொண்ட செல்லம்மாள் நன்றாகப் பாடுவார். ஆனால் எப்போதாவதுதான் பாடுவார். செல்லம்மாளுக்குப் பயணம் மேற்கொள்வதில் மிகுந்த ஆர்வமும் உற்சாகமும் இருந்தது. இந்தியாவில் காஷ்மீர் வரை சென்றிருக்கிறார். மூன்று முறை அமெரிக்கா சென்றிருக்கிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
செல்லம்மாள்
செல்லம்மாளின் வாழ்க்கைக் குறிப்புகள் ஒரு பெண்ணின் குடும்பம் குறித்த தொடர்ந்த மனத்தாங்கலின் ஆவணம் மேலும்