Your cart is empty.
லா.ச. ராமாமிருதம்
பிறப்பு: 1916
லா.ச. ராமாமிருதம் (1916 - 2007) தமிழின் முன்னோடி இலக்கியவாதிகளில் ஒருவரான லால்குடி சப்தரிஷி ராமாமிருதம் திருச்சி மாவட்டம் லால்குடியில் பிறந்தார். பதினேழாம் வயதில் எழுதிய ஆங்கிலச் சிறுகதை மூலம் இலக்கிய உலகில் நுழைந்தார். பின்னர் தமிழில் எழுதத் தொடங்கினார். மணிக்கொடி உள்ளிட்ட இலக்கிய இதழ்களிலும் வெகுஜன இதழ்களிலும் தனது படைப்புகளை வெளியிட்டார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் - ‘இதழ்கள்’, ‘பச்சைக் கனவு’, ‘ஜனனி’, ‘த்வனி’, ‘உத்தராயணம்’ உள்ளிட்டவை குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுப்புகள் - ‘புத்ர’, ‘அபிதா’ முதலான ஆறு நாவல்களையும் எழுதினார். வாழ்க்கை அனுபவக் கட்டுரைகள் இரு நூல்களாக வெளிவந்துள்ளன. தன் வரலாற்று நூலான ‘சிந்தா நதி’ சாகித்திய அக்காதெமி (1989) விருது பெற்றது. லா.ச.ரா. நீண்ட காலம் வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். சென்னையில் காலமானார்.