Your cart is empty.
லாரா ஃபெர்கஸ்
லாரா ஃபெர்கஸ் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் வளர்ந்த லாரா ஃபெர்கஸ் நடனக் கலை மீதிருந்த ஆர்வத்தின் காரணமாக அறிவியல் பட்டப்படிப்பைத் துறந்தவர். சில காலம் நடனக் கலைஞராக இருந்த இவர், கணுக்காலில் ஏற்பட்ட பிரச்சினையினால் ஆட இயலாது போனபின் நடனத்தைத் துறந்தார். பாத்திரங்கள் கழுவுவது, உலகில் வேறு இடங்களுக்குச் செல்வது ஆகியவை இவரது முக்கியப் பணிகளாயின. ஏழு ஆண்டுகள் வேறு நாடுகளில் வசித்தார். அதிக காலம் பாரிஸ் நகரத்தில். எழுத்து, பெண்கள் வாழ்வைப் பற்றிய மேற்படிப்பு, சர்வதேச சட்டங்கள் ஆகிய துறைகளில பட்டங்களைப் பெற்ற இவர், பின் புலம்பெயரும் பெண்கள், அகதிகளாகும் பெண்கள் ஆகியோருக்கெனச் செயல்படும் அமைப்புகள் மற்றும் வேறு பல அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினார். மனித உரிமைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். இவரது பணிகளில் பெண்கள் மீதான வன்முறைகள் சிறப்புக் கவனம் பெறுகின்றன. தற்போது இவர் மெல்பர்ன் நகரில் தன்னுடைய துணைவி மரீஸுடன் வசித்துவருகிறார். ‘My Sister Chaos’ இவரது முதல் நாவல்.
