லோரன்ஸ் வில்லலோங்கா (1897-1980) ஸ்பெயினின் பால்மா தெ மஜோர்க்காவில் பிறந்தவர். ஸ்பானிய மொழியிலும் கட்டலன் மொழியிலும் சரளம்கொண்டவர். பதினைந்து நாவல்கள், ஐந்து சிறுகதைத் தொகுதிகள், ஐந்து நாடகத் தொகுப்புகள் என நிறைய எழுதியவர். இவைபோக, செய்தித்தாள்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் எழுதிய கட்டுரைகள் ஐநூறைத் தாண்டும். அவரது படைப்புகளில் மகத்தானது என்று கருதப்படுவது, 'பொம்மை அறை'. போருக்குப் பிந்தைய கட்டலன் புனைகதைப் பரப்பில் ஆகப்பெரிய இடம் வகிப்பது. இதன் முதல் பதிப்பு 1956இல் வெளியானது. 1987இல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்:
யுவன் சந்திரசேகர் (எம். யுவன்) பிறந்தது மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள கரட்டுப்பட்டி என்ற சிறு கிராமத்தில். வசிப்பது சென்னையில். பாரத ஸ்டேட் வங்கியில் பணி.