Your cart is empty.
எம்.ஏ. நுஃமான்
பிறப்பு: 1944
எம்.ஏ. நுஃமான் (1944) கவிஞர், இலக்கிய விமர்சகர், ஆய்வாளர். சிறுகதைகளும் எழுதியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவர், இலங்கை பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ஆசிரியர், இணையாசிரியர், பதிப்பாசிரியர், இணைப்பதிப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் இதுவரை 27 நூல்கள் வெளியிட்டுள்ளார். ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளிலிருந்து கவிதைகளும் சிறுகதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது கவிதைகள் ஆங்கிலம், சிங்களம், கன்னடம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆக விவேகமான பார்வை இவருடையது தான்’ என சுந்தர ராமசாமி இவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
முற்றுப்பெறாத விவாதங்கள்
-எம். ஏ. நுஃமானின் அக்கறைகளையும் அவதானிப்புகளையும் தரிசனங்களையும்
காட்டுகிறது இந்நேர்காணல மேலும்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
எம்.ஏ. நுஃமானின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூக யதார்த்தத்துக்கும் இலக்கி மேலும்
மொழியும் இலக்கியமும்
மொழி, இலக்கியம் தொடர்பாக நவீன மொழியியல் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஒருபுற மேலும்
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
மார்க்சியம் இறந்துவிட்டது, அது காலப்பொருத்தமற்றது என்ற கூச்சலுக்கு மத்தியில் மார்க்சியமும் இலக்க மேலும்