Your cart is empty.
எம்.பி. இராமன்
பிறப்பு: 1949
எம்.பி. இராமன் @ இராமானுசம் (பி. 1949)
பேரா. எம்.பி.ஆர். கல்வியாளர்; அறிவியல் ஆய்வறிஞர்; சுற்றுச்சூழல் ஆர்வலர், ஆய்வாளர்; அறிவியல், தொழில்நுட்ப ஆய்வரங்கக் கருத்தாளர்; அறிவியல் விழிப்புணர்வுப் பரப்புரைஞர்; பேச்சாளர்; அறிவியல் தமிழ் எழுத்தாளர்.
2004இல் ஜூனியர் விகடன் இதழில், இவர் எழுதிய சூழல் விழிப்புணர்வுத் தொடரான அச்ச ரேகை தீர்வு ரேகை, உலகளாவிய வரவேற்பைப் பெற்றது; அவ்விதழின் 25 ஆண்டுப் பயணத்தில், ஒரு மைல் கல் படைப்பாகத் தெரிவு செய்யப்பட்டது.
1994இல் ‘பரம்பரை தொடரும் பாதை’ என்னும் நூலுக்கு, தமிழ்நாடு அறிவியல் பேரவையின் ‘சிறந்த அறிவியல் எழுத்தாளர் விருது’, 1999இல்; ‘சூழல் படும் பாடு’ நூலுக்குப் புதுவை அரசின் ‘கம்பன் புகழ்ப் பரிசு’, 2006இல் ‘அச்ச ரேகை தீர்வு ரேகை’ நூலுக்குப் புதுச்சேரி கூட்டுறவுப் புத்தகச் சங்கத்தின் ‘சிறந்த எழுத்தாளர் விருது’, 2014இல் ‘கடவுள் காக்கும் காடு’ நூலுக்குத் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் ‘சிறந்த சிறுவர் இலக்கியம் விருது’ ஆகியவை இவரது எழுத்து வன்மைக்குக் கிடைத்த அங்கீகாரங்கள்.
மாநில, தேசிய அளவில் கல்வி, அறிவியல் சுற்றுச்சூழல் சார்ந்த நிபுணர் குழுக்களிலும் உறுப்பினராகப் பங்களித்துள்ளார். அறிவியல், சமூக விழிப்புணர்வுப் பணிகளுக்காகப் புதுவை அரசின் ‘சுற்றுச் சூழல் விருது (1997)’, புது தில்லி, தேசிய சுற்றுச் சூழல் ஆயம் வழங்கிய ‘சுற்றுச் சூழல் சாதனையாளர் விருது’ (2005), ஜார்க்கந்து மாநிலம், பன்னாட்டுச் சுற்றுச் சூழல் தகவல் தொடர்புப் பேராயம் வழங்கிய ‘பேராசிரியர் ஓடம் பொற்பதக்கம்’ (2007), மதுரை முத்து அறக்கட்டளையின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ (2016) உட்படப் பதினான்கு விருதுகளைப் பெற்றுள்ளார்.
2005 முதல் ஐக்கிய நாடுகளின் சுற்றுச் சூழல் பராமரிப்புச் செயல்திட்ட நிறுவனத்தின் உறுப்பினர். 2007 முதல் 2016 வரை புதுச்சேரி அரசில், மாநில சுற்றுச்சூழல் தர மதிப்பீட்டு நிபுணர் குழுவின் தலைவர்; 2014 முதல் புதுச்சேரி அரசு உயர்கல்வி ஆலோசனைக் குழு உறுப்பினராக பணியாற்றிவருகிறார்.
அலைபேசி: 94420 67567
மின்னஞ்சல்: mpraman@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஃபிரஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி: நாடும் பண்பாடும் (1815-1945)
"பதினேழாம் நூற்றாண்டில் வெற்றிகரமாகத் தொடங்கிய ஃபிரான்சின் கீழ்த்திசைக் காலனியாக்கப் பயணம், பதினெ மேலும்