Your cart is empty.
மா. கோபாலகிருஷ்ணன்
பிறப்பு: 1940
மா. கோபாலகிஷ்ணன் புதுச்சேரியில் 1940ஆம் ஆண்டு பிறந்து, அங்குள்ள பிரெஞ்சுக் கல்லூரியில் 1958வரை படித்தபின், பிரான்சுக்குச் சென்று 1963ஆம் ஆண்டு பௌதிகம், பொறியியலில் பட்டம் பெற்றார். சுமார் 45 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாட்டின் வரலாறு பற்றி ஆய்வு செய்துவருகின்றார். பாரிசில் கணினிப் பொறியியலாளராகப் பணிபுரிந்து ஒர்சேவில் ஓய்வுபெற்ற இவர் பட்டினப்பாலையைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார். கோலாலம்பூர், தைப்பே, மொரீசியசு, பாரிசு, புதாபெஸ்த், ஜடெல்பெர்க் ஆகிய இடங்களிலும், தமிழ்நாடு, புதுவை மாநிலங்களின் பலவிடங்களிலும் பல ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கனவாகும். இவருடைய படைப்புகள் ‘ஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட்குறிப்பு பிறசொற்பத்தி ஆண்டு (1751-1752)’, ‘ஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட்குறிப்பு ஆங்கிரச ஆண்டு (1752-1753)’, ‘ஆனந்தரங்கப்பிள்ளை வி-நாட்குறிப்பு சிரீமுக ஆண்டு (1753-1754)’ ஆகியன இதுவரை பதிப்பிக்கப்படாத பல புதிய விபரங்களைக் கொண்டுள்ளன. மனைவி : சுந்தரி, மகள்கள் : காவேரி, பவானி, பொன்னி
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
இரண்டாம் வீராநாய்க்கர் நாட்குறிப்பு
பதினெட்டாம் நூற்றாண்டின் பின்பாதியில் சூன் 1778 முதல் சூலை 1792வரை புதுச்சேரியில் பிரெஞ்சுக் கும் மேலும்