Your cart is empty.
மா. கிருஷ்ணன்
பிறப்பு: 1912-1996
இயற்கையியல் பற்றிக் கட்டுரைகளும் நூல்களும் ஆங்கிலத்தில் எழுதி அனைத்துலகப் புகழ்பெற்றவர். பத்மஸ்ரீ, ஜவகர்லால் நேரு நல்கை முதலான பெருமைகள் அவரைத் தேடி வந்தன. தமிழின் முதல் நாவலாசிரியர்களில் ஒருவரான அ. மாதவையாவின் கடைசி மகனாகப் பிறந்த மா. கிருஷ்ணன், 1950களில் எழுத்தையே முழுநேரப் பணியாகக் கொண்டு ஆங்கிலத்தில் மட்டுமே எழுதத் தொடங்கினார். அதற்கு முன்பு அவர் தமிழில் எழுதிய கட்டுரைகளைப் பலரும் அறியமாட்டார்கள். இப்போது முதன்முதலாக அவை நூலாக்கம் பெறுகின்றன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மிகுந்துவரும் இந்நாளில் தமிழில் இது பற்றிய சொல்லாடலும் விவாதமும் செழுமைபெற இந்நூல் உதவும்.

