Your cart is empty.
மஹாபளேஷ்வர் ஸைல்
மஹாபளேஷ்வர் ஸைல் (பி. 1943) கொங்கணி எழுத்தாளரான மஹாபளேஷ்வர் ஸைல் கர்நாடக மாநிலம் கார்வாரில் பிறந்தவர். இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு எழுதத் தொடங்கினார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள், ஐந்து புதினங்கள் வெளியாகியுள்ளன. மராத்தி மொழியிலும் எழுதிவருகிறார். இவர் மராத்தியில் எழுதிய ‘தாண்டவ்’ (2012) என்ற புதினம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஸைல் எழுதிய நான்கு நாடகங்கள் மேடையேற்றப்பெற்றுள்ளன. ‘தரங்கா’ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக 1993ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது வழங்கப்பட்டது. இவரது இலக்கியப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவின் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்றான சரஸ்வதி சம்மான் விருது (2016) வழங்கப்பட்டது. மஹாபளேஷ்வர் ஸைல் தற்போது கோவாவில் வசித்துவருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
யார் அறிவாரோ
கொங்கணி மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு நூல்வடிவில் வெளிவரும் முதல் படைப்பு ‘யார் அறிவாரோ. மேலும்