Your cart is empty.
மலாலா யூசுஃப்ஸை
பிறப்பு: 1997
மலாலா யூசுஃப்ஸை (பி. 1997) குல்மக்காய் என்ற புனைபெயர் பூண்டு பி.பி.சி. உருதுவில் எழுதத் தொடங்கியபோது, பாகிஸ்தான் ஸ்வாட் பள்ளத்தாக்கைச் சேர்ந்த, கல்விக்காகப் பிரச்சாரம் செய்யும் பெண்ணான மலாலா யூசுஃப்ஸை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தன் சமூகத்தில் பெண்களின் கல்விக்காகத் தன் குடும்பம் போராடுவது பற்றி எழுதினார். 2012 அக்டோபரில், பள்ளியிலிருந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது தாலிபான்கள் அவரைக் குறிவைத்துத் தலையில் சுட்டனர். அதிசயத்தக்க வகையில் உயிர் தப்பி, கல்விக்கான தன் போராட்டத்தை இன்னும் தொடர்கிறார். அவருடைய துணிச்சலுக்காகவும் சொல்வன்மைக்காகவும், பாகிஸ்தானின் தேசிய அமைதிப் பரிசு (2011) அவருக்கு வழங்கப்பட்டது. அதன்பின் சர்வதேசக் குழந்தைகள் அமைதிப் பரிசு (2013) வழங்கப்பட்டது. அந்த வருடத்தின், சிறந்த நபருக்கான பட்டியலில் இவர் பெயரும் டைம்ஸ் பத்திரிகையில் இடம்பெற்றது. அமைதிக்கான நோபல் பரிசு மிக இளம்வயதிலேயே 2014இல் பெற்றுள்ளார். மலாலா ஃபண்டின் மூலம் உலகில் உள்ளோர் அனைவரும் கல்வி கற்க ஒரு வழி உருவாக்கித் தரப் போராடிக்கொண்டிருக்கிறார். லாப நோக்கமில்லாத இந்த நிறுவனம், சமூகம் சார்ந்த கல்வி இயக்கங்களுக்கு, உலகம் முழுவதும் கல்விக்காக உதவி செய்கிறது. www.malalafund.org
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
நான் மலாலா
ஸ்வாட் பள்ளத்தாக்கை தாலிபான்கள் கைப்பற்றியபோது ஒரேயொரு பெண் எதிர்த்து நின்றாள். வாய்மூடி அமைதிய மேலும்