மரிஜா ஸ்ரெஸ் (1943)
ஸ்லோவேனியாவிலிருந்து இந்தியா வந்து குஜராத்தின் துங்ரி கஸேரியா காட்டுப் பகுதியில் ஆதிவாசிகளிடையே முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இறை ஊழியம் செய்ய வந்தவர் மரிஜா ஸ்ரெஸ். ஆதிவாசிகளைப் பற்றிய அவருடைய நூற்கள் பல ஐரோப்பிய மொழிகளிலும், குஜராத்தி, மராத்தி மொழிகளிலும் வெளிவந்துள்ளன.
குஜராத் மாநிலத்தின் வடக்கு எல்லையில் ராஜஸ்தானைத் தொட்டிருக்கும் மலைப்பகுதிகளில் வசிக்கும் துங்ரி கரேஸியா ஆதிவாசிகளிடையே வெகுகாலமாகப் புழங்கி வந்த கதைகள் இவை. காமத்தில் திளைக்கும் ராஜா ராணிகள் முதல் காதல் வயப்படும் இளைஞர்கள் அனைவருக்கும் உடலின்பமே உயிரோடு இருப்பதுவரை தேவையான ஒன்று என்கின்றனர். கடவுள்கூடப் பெண்தான், ஆணல்ல. அவளே தன் மக்களிடையே காதலை ஏவிவிட்டு ஆட வைக்கிறாள். பறவைகள், விலங்குகள், இடையே வாழும் ஆதிவாசிகளின் இயற்கையோடிணைந்த வாழ்க்கை அவர்களுடையது. நிர்மலமான ஆற்று நீரில் குளிக்கும் இளம் பெண்களோடு காதல் புரியும் ஆண்மை மிக்க இளைஞர்கள் நிரம்பிய இந்தக் கதைகளில் மாற்றாந் தாய்க்கொடுமை, கொலை செய்யும் மனைவி, கொடுங்கோல் மன்னன் போன்றவர்களும் இடம் பெறுகின்றனர்.