Your cart is empty.
மு. சுயம்புலிங்கம்
பிறப்பு: 1944
மு. சுயம்புலிங்கம் (பி. 1944) சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை. தந்தை முனியசாமி நாடார், தாயார் பெரிய பிராட்டி. தாமரை இதழில் முதல் கதை வெளிவந்தது. அதே இதழில்தான் கந்தர்வனின் முதல் கதையும் வெளிவந்தது. 1970களில் நாட்டுப் பூக்கள் என்ற பெயரில் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை நடத்தினார். கி. ராஜநாராயணன் முயற்சியால் இவரது கையெழுத்துப் படியிலிருந்து தேர்ந்தெடுத்த எழுத்துகள் கோணங்கி நடத்திவரும் கல்குதிரை சிறப்பிதழில் 1990வாக்கில் வெளிவந்தது கவனம் பெற்றது. இவரது எழுத்துகள் ‘ஊர் கூட்டம்’, ‘நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்’, ‘ஒரு பனங்காட்டு கிராமம்’ என மூன்று தொகுதிகளாக இதுவரை வெளிவந்துள்ளன. தற்போது சங்க இலக்கிய நூலான நற்றிணையிலிருந்து நூறு பாடல்களைத் தேர்வுசெய்து அதனடிப்படையில் கதைகள் எழுதிவருகிறார்.