Your cart is empty.
என்.எஸ். மாதவன்
பிறப்பு: 1948
என்.எஸ். மாதவன் (பி. 1948) கொச்சியில் பிறந்தவர். கொச்சி ஸ்ரீ ராமவர்மா உயர்நிலைப் பள்ளி, எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி, திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக்கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்றார். பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்று இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். பீகார் மாநிலத்தில் மாவட்டத் துணை ஆட்சியர், ஆட்சியர் முதலான பதவிகளில் பணியாற்றி அம்மாநில உள்ளாட்சித் துறைச் செயலரானார். பீகாரில் வசிக்கிறார். ஐந்து சிறுகதைத் தொகுதிகளும் நாவல், நாடகம், விமர்சனம் ஆகிய பிரிவுகளில் ஒவ்வொரு நூலும் வெளிவந்துள்ளன. ‘லந்தன் பத்தேரியிலே லுத்தினியகள்’ (டச்சு பீரங்கித் தளத்தில் பாசுரங்கள்) நாவலின் ஆங்கில மொழியாக்கத்துக்கு (மொழியாக்கம் - ராஜேஷ் ராஜமோகன்) வோடஃபோன் கிராஸ்வேர்ட் புத்தக விருது வழங்கப்பட்டது. ‘பெருமரங்கள் விழும்போது’ சிறுகதை ‘காயாதரண்’ என்ற பெயரில் சசிகுமாரால் இந்தியில் திரைப்படமாக்கப்பட்டது. மனைவி ஷீலா ரெட்டி அவுட்லுக் ஆங்கில வார இதழின் புத்தகப் பகுதி ஆசிரியர். மகள் மீனாட்சி ரெட்டி மாதவன் புகழ்பெற்ற வலைப்பதிவர், நாவலாசிரியர்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பெருமரங்கள் விழும்போது
சம கால மலையாள இலக்கியத்தில் நவீனத்துவம் பெரும் வீச்சை நிகழ்த்திய எழுபதுகளில் அறிமுகமானவர் என்.எஸ் மேலும்