Your cart is empty.
நாம்தேவ் நிம்கடே
என்.எம். நிம்கடே என்.எம். நிம்கடே 1925 மே ஒன்றாம் தேதி மகாராஷ்ட்ரா மாநிலத்தில் சந்த்புர் மவாட்டத்தில் ஸாத்காவ் என்ற கிராமத்தில் பிறந்தார். புது தில்லி பாரதீய விவசாயக் கழகத்தில் 1952இல் பணியில் சேர்ந்து 1965வரை பணியாற்றினார். அதிலிருந்துகொண்டே M.Sc மற்றும் Ph.D மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வழிகாட்டினார். அனேக விஞ்ஞான சம்மேளனங்களில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார். பல பத்திரிகைகளில் விவசாயம் குறித்த கட்டுரைகள் எழுதினார். மாணவப் பருவத்திலேயே பொதுநலப் பணிகளில் ஈடுபட்டார். 1941இல் உம்ரேட் நகரில் ஊர்க்கிணற்றில் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் எடுப்பதற்காக சத்யாகிரகம் செய்தார். அம்பேத்கர் பவனில் உயர்நிலைப் பள்ளி அமைக்க உதவினார். 1966இல் பாராளுமன்ற வளாகத்தில் பாபா சாகேபின் வெண்கலச் சிலை நிறுவும்பொருட்டு நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ‘அஸ்மதாதர்ஷ்’, ‘சந்தேஷ்’, ‘சுகாதா’, ‘பௌத்த மித்ர’, ‘பிரபுத்த பாரத்’, ‘தருண் பாரத்’, ‘பகுஜன் ஸங்கர்ஷ்’, ‘லோகானுகம்பா’, ‘மைத்ரணி’, ‘ஸாதீ’ போன்ற பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். ‘க்ராந்திசூர்ய’, ‘தார்மீக’ ஆகிய இதழ்கள் இவருடைய கவிதைகளை வெளியிட்டன. நாக்புரில் குமாரி கமல் ஸோன்டைக்கேயுடன் 1953 டிசம்பர் 26இல் திருமணம் நடைபெற்றது. இவருக்கு பீமராவ், அசோக் என்று இரண்டு மகன்களும் ரேகா என்ற மகளும் உள்ளனர். நிம்கடே 1985இல் பணியில் இருந்து ஓய்வுபெற்று தில்லியில் வசித்துவருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
புலியின் நிழலில்
இந்தியாவின் மேற்குப் பகுதியில் ஸாத்காவுன் என்ற கிராமத்தில் பிறந்தார் நாம்தேவ் நிம்கடே. பெற்றோர் மேலும்