Your cart is empty.
நொயல் நடேசன்
பிறப்பு: 1954
கானல் தேசம் நொயல் நடேசன் (பி. 1954) இலங்கை - யாழ்ப்பாணத்துக்கு மேலே அமைந்திருக்கும் சிறிய தீவுகளில் ஒன்றான எழுவைதீவில் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருகவைத்தியத் துறையில் படித்துச் சில காலம் இலங்கையிலேயே பணியாற்றினார். புலம்பெயர்ந்து இந்தியாவிலும் சில காலம் தங்கியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். தன்னுடைய துறைசார்ந்த அறிவையும் அனுபவத்தையும் மையமாகக் கொண்டு தமிழில் பல வகையான எழுத்துகளை எழுதிவரும் நடேசனுடைய மூன்று நாவல்களில் இரண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. தவிர, கதைகளையும் அனுபவப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார்; கூடவே பயணக்கட்டுரைகள் பலவும். உதயம் என்ற பத்திரிகையை 13 ஆண்டுகளாக சவால்கள், எதிர்ப்புகளின் மத்தியில் துணிச்சலோடு அவுஸ்திரேலியாவில் வெளியிட்டார். இதுவரையில் மூன்று நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளிவந்திருக்கின்றன. தொடர்புக்கு: uthayam12@gmail.com.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
நாலுகால் சுவடுகள் (இ-புத்தகம்)
விலங்குகளுக்குச் சிகிச்சை செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்தவர் கால்நடை மருத்துவர் நோயல் நடேசன். ஆழ் மேலும்
கானல் தேசம்
இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போர்ப் பிரதேசத்துள் நிகழும் புனைவிது. போருக்காகக் கட்டமைக்கப்படும் மேலும்
வாழும் சுவடுகள்
இந்த நூலில் நடேசன் தனது கால்நடைமருத்துவஅனுபவங்களைப் பதிவுசெய்திருக்கிறார். கால்நடைகள் குறிப்பாக வ மேலும்




