ஓட்டமாவடி அறபாத் (பி.1970)
கிழக்கிலங்கை ஓட்டமாவடியைப் பிறப்பிடமாகக்கொண்ட அறபாத் அவர்கள் கலைப்பட்டதாரியும் பயிற்றப்பட்ட மௌலவியும் ஆவார். தற்போது அரசுப் பணிபுரிந்து வருகிறார்.
இவரது முதல் சிறுகதைத்தொகுதி ‘நினைந்தழுதலு’க்கு விபவி விருதும் ‘உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி’ சிறுகதைத் தொகுதிக்கு இலங்கை அரசின் சாஹித்யமண்டலச் சான்றிழும் கிழக்குமாகாண சபையின் விருதையும் வென்றவர்.
கவிதை, கதை, கட்டுரை என பல்வேறு துறைகளில் இயங்குபவர். இதுவரை பதினொரு நூல்களை எழுதியுள்ளார்.
2015 முதல் இலங்கை அரசின் 11ஆம் ஆண்டு தமிழ்ப்பாட நூலில் இவரின் சிறுகதை ‘மூத்தம்மா’ இடம்பெற்றுள்ளது.
மனைவி : சுஹா
குழந்தைகள் : உமைர் ஹம்தான், ஷைத் அம்மார்,
அமாராசிரீன், அம்ராஷெரின்
மின்னஞ்சல் : arafathzua@gmail.com
அலைபேசி : 0777761479
வாட்சாப் : 0719493939