Your cart is empty.
பொ. கருணாகரமூர்த்தி
பிறப்பு: 1954
பொ. கருணாகரமூர்த்தி (பி. 1954) இலங்கை, புத்தூரில் பிறந்தவர். ஸ்ரீசோமாஸ் கந்தா கல்லூரியில் கல்வி பயின்றார். Marine Radio-Tele communications என்னும் இலத்திரனியல் கற்கை நெறியில் பட்டயச் சான்றிதழ் பெற்றுள்ளார். 1980இல் பெர்லினுக்குப் புலம்பெயர்ந்தார். தற்போது வாடகை வண்டி சாரதீயத்தின் மூலம் ஜீவனம். மனைவி ரஞ்ஜினி பெர்லின் தமிழாலயத்தில் தன்னார்வத் தமிழாசிரியை. குழந்தைகள்: காருண்யா, அச்சுதன், ஜெகதா, பூமிகா. 1985இல் கணையாழி யில் வெளிவந்த ‘ஒரு அகதி உருவாகும் நேரம்’ எனும் குறுநாவல் மூலம் சிறுபத்திரிகை வாசகர்களுக்கு அறிமுகமானார். காருண்யன், கொன்ஃபூசியஸ், புதுவை நிலவன், அழகுமுருகேசு முதலிய பெயர்களில் அவ்வப்போது கவிதைகள் எழுதிவருகிறார். ‘பதுங்கு குழி’ சிறுகதைத் தொகுப்பு கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தால் 2010ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. தொடர்புக்கு : P. Karunaharamoorthy, Skalitzerstr.142 10999 Berlin, Germany தொலைபேசி : 004930.54493337 மின்னஞ்சல் : karunah08@yahoo.com karunah08@gmail.com வலைப்பூ : Karunah.blogspot.com Couvin.blogspot.com pathungukuzi.wordpress.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
வெயில் நீர்
இத்தொகுப்பு மூன்று குறுநாவல்களையும் குறுநாவல் (வகைமையின்) சாயல்கொண்ட மூன்று நெடுங்கதைகளையும் உள்ள மேலும்
வனம் திரும்புதல்
புலம்பெயர் தேசங்களில் அலையும் மனிதர்களையும் பொருளாதார, சமூக பாதுகாப்பைக் கோரி நிற்கிற கதாபாத்திரங மேலும்
அனந்தியின் டயறி
நான் வாழும் பெர்லினில் (ஜெர்மனி) எனது வாழ்க்கைச் சூழல், எனைச்சூழவுள்ள உறவுவட்டங்கள், சமூகம், செய் மேலும்