Your cart is empty.
பாவண்ணன்
பிறப்பு: 1958
பாவண்ணன் (பி. 1958) இயற்பெயர் ப. பாஸ்கரன். பெங்களூர் பாரத் சஞ்சார் நிகம் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பதினாறு சிறுகதைத் தொகுதிகளும் மூன்று நாவல்களும் இரண்டு குறுநாவல்களும் மூன்று கவிதைத் தொகுதிகளும் பதினெட்டு கட்டுரைத் தொகுதிகளும் மூன்று குழந்தைப்பாடல் தொகுதிகளும் இவருடைய படைப்புகள். ஐந்து நாவல்கள், ஏழு நாடகங்கள், இரண்டு தலித் சுயசரிதைகள், ஒரு சிறுகதைத் தொகுதி, கன்னட தலித் எழுத்துகளைப் பற்றிய ஓர் அறிமுக நூல், நவீன கன்னட இலக்கிய முயற்சிகளை அடையாளப்படுத்தும் இரண்டு தொகைநூல்கள் என எண்ணற்ற கன்னட படைப்புகளைத் தமிழாக்கியிருக்கிறார். 1995இல் வெளிவந்த ‘பாய்மரக் கப்பல்’ நாவலுக்கு இலக்கியச் சிந்தனைப் பரிசும், ‘பயணம்’ சிறுகதைக்கு 1996இல் கதா விருதும், ‘பருவம்’ கன்னட நாவலை மொழிபெயர்த்தமைக்காக 2005இல் சாகித்திய அக்காதெமி விருதும் பெற்றவர். மனைவி அமுதா. மகன் அம்ரிதா மயன் கார்க்கி. மின்னஞ்சல்: paavannan@hotmail.com