Your cart is empty.
பிரேம்
பிறப்பு: 1965
பிரேம் (பி. 1965)
இயற்பெயர் பிரேமானந்தன். புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது சோதனை முறை எழுத்துகள் 1985 - 87 காலப் பகுதியில் கிரணம் இதழ்களாக வெளிவந்ததிலிருந்து தொடர் விவாதங்களை உருவாக்கிப் படைப்பிலக்கியம், கோட்பாடாக்கம் என்பவற்றை இணைத்து எழுதி வருகிறார். தமிழில் படைப் பிலக்கியத்திலும் கோட்பாட்டுத்தளத்திலும் இயங்கும் மிகச் சிலரில் ஒருவர். 1994 - 2002 காலப்பகுதியில் அம்பேத்கர், அயோத்திதாசர் பயிற்சி வகுப்புகள், தலித் நாடக இயக்கம் என்பவற்றில் அமைப்பாளராக இருந்து புதுவை தலித் இயக்கங்களின் செயல்பாடுகளில் பங்காற்றியிருக்கிறார். தமிழின் பின்நவீனத்துவ, பின்காலனிய, விளிம்புநிலை அரசியல் கோட்பாடுகளையும் விவாதங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் இவர் தற்போது தில்லிப் பல்கலைக் கழகத்தின் நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையில் இந்திய இலக்கியங்களுக்கான பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
காந்தியைக் கடந்த காந்தியம்
காந்தியையும் காந்தியத்தையும் மார்க்ஸிய, அம்பேத்கரிய, பெண்ணிய அடிப்படையிலான பன்மை நவீனத்துவத் தளத் மேலும்