Your cart is empty.
புதுமைப்பித்தன்
பிறப்பு: 1906 - 1948
புதுமைப்பித்தன் (1906 - 1948) தமிழ்ச் சிறுகதையின் முதல்வராக மதிக்கப்படும் புதுமைப்பித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாசலம். தந்தையார் வி. சொக்கலிங்கம் பிள்ளை, தாசில்தார். தாயார் பர்வதத்தம்மாள். 1931இல் புதுமைப்பித்தன் நெல்லை இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று கமலா (1917-1995)வைத் திருமணம் செய்து கொண்டார். முதல் படைப்பு ‘குலோப்ஜான் காதல்’ 1933இல் காந்தியில் வெளிவந்தது. தினமணியின் உதவி ஆசிரியராகவும் பின்னர் தினசரியிலும் பணியாற்றினார். 1946இல் திரைப்படத் துறையில் நுழைந்தார். 1948இல் காசநோயால், மகள் தினகரியின் இரண்டாவது வயதில், திருவனந்தபுரத்தில் மரணமடைந்தார். புதுமைப்பித்தனின் ஒரே வாரிசு திருமதி தினகரி சொக்கலிங்கம் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.


