Your cart is empty.
ரா.அ. பத்மநாபன்
பிறப்பு: 1917 - 2014
ரா.அ. பத்மநாபன் (1917 - 2014) 1921இல் காலமான பாரதியை நேரில் அறிந்த நண்பர்கள் அவரை நினைவுகூர்ந்து எழுதிய கட்டுரைகள் இவை. பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபனின் பெருமுயற்சியில் உருவான அரிய தொகுப்பின் புதிய பதிப்பு இது. பாரதி என்ற ஆளுமையை அறிந்துகொள்ளவும் புரிந்துகொள்ளவும் இன்றியமையாத துணைநூல் இது. பாரதி புதையல் திரட்டுகள், சித்திரபாரதி ஆகிய நூல்களை வழங்கியவர் பாரதி அறிஞர் ரா.அ. பத்மநாபன். தமது பதினாறாம் வயதிலேயே தமிழ்ப் பத்திரிகை உலகில் நுழைந்துவிட்ட ரா.அ. பத்மநாபன், ஆனந்த விகடன், ஜெயபாரதி, ஹநுமான், ஹிந்துஸ்தான், தினமணி கதிர், அகில இந்திய வானொலி, அமெரிக்கத் தூதரகச் செய்திப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றியவர். தமிழக அரசு 2003ஆம் ஆண்டுக்கான பாரதி விருதை இவருக்கு வழங்கியது. வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, வ.வே.சு. ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி முதலான தேசிய இயக்கப் பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
பாரதியார் கவிநயம்
1921இல் பாரதி காலமான அடுத்த இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளில் அவருடைய கவிதையை மதிப்பிட்டுப் பல்வேற மேலும்
தமிழ் இதழ்கள்
‘சுதேசமித்திரன்’, ‘தேசபக்தன்’, ‘தமிழ் ஸ்வராஜ்யா’, ‘தமிழ்நாடு’, ‘இந்தியா’, ‘ஜெய பாரதி’, ‘ஆனந்த குண மேலும்
சித்திர பாரதி
1937இலிருந்தே பாரதி குறித்த தேடலைத் துவக்கிவிட்ட ஆய்வாளரான ரா.அ. பத்மநாபனின் அரிய ஆவணங்கள், அபூர் மேலும்