Your cart is empty.

இரா. பிரபாகர்
இரா. பிரபாகர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பொருளியலில் இளங்கலைப் பட்டமும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற் புலத்தில் முதுகலை பட்டமும் பெற்றவர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இணைப்பேராசிரியர். இலக்கியம் தவிர்த்து வெகுசனப் பண்பாடு, ஊடகங்கள் பற்றிய ஆய்வுகளில் ஆர்வம் கொண்டவர். தமிழக வெகுசன இசையின் சமூகப் பண்பாட்டுத் தாக்கங்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர். காட்சிப்பிழை இதழில் சினிமா தொடர்பான இவரின் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. தொலைக்காட்சித் தொடர்கள், குறும் படங்கள், ஆவணப்படங்களுக்கு இசையமைத்த அனுபவமும் உண்டு. மதுரையில் மாற்றுக் கல்வி, கலை - பண்பாட்டுச் செயற்பாடுகளுக்கான ‘கலைடாஸ்கோப்’ எனும் மையத்தை நண்பர்களுடன் இணைந்து இரண்டாண்டுகளாக நடத்தி வருகிறார். ‘கொஞ்சம் இசை, கொஞ்சம் சினிமா’ எனும் வலைப்பூவில் அவ்வப்போது எழுதிவருபவர். கைபேசி: 9443444378 மின்னஞ்சல்: profprabahar@gmail.com www.prabahar1964.blogspot.in