ச. இராகவன் (1976)
யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பகுதியிலுள்ள கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டவர். 1998 காலப்பகுதியிலிருந்து எழுதிவரும் இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பான ‘கலாவல்லி’ முதலான கதைகள் புதுஎழுத்து வெளியீடாக 2010 நவம்பர் மாதம் வெளிவந்தது. 2002 காலப்பகுதியில் ஸ்கிறிப்நெற் - சமாதானச்சுருள் (Script Net Reel Peace) வெளியீடாக ‘மூக்குப்பேணி’ (Nose Cup) என்ற குறும்படத்தை சுவடியாக்கம் செய்து இயக்கினார். 2005 காலப் பகுதியில் இலண்டன் விம்பம் அமைப்பின் சிறந்த திரைச் சுவடியாக்குநருக்கான விருதை ‘மூக்குப்பேணி’ குறும்படத்திற்காக பெற்றுள்ளார். 2002 காலப்பகுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொழில் நிர்வாகமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டதுடன் அக்காலப்பகுதியில் விபவி அமைப்பின் சிறந்த இளஞ்சிறுகதை எழுத்தாளருக்கான விருதினையும் பெற்றார். இவர் தற்போது பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி வங்கி முகாமையாளராகக் கடமையாற்றி வருவதோடு சமுர்த்தி சக அபிவிருத்தி மன்ற வெளியீடான சுபீட்சம் என்ற செய்தி மடலின் ஆசிரியராகவுமுள்ளார். ‘விட்டில்’ இவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு.
முகவரி : “ஈஸ்வரி வாசம்”
கரவெட்டி கிழக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம்
இலங்கை.
தொலைபேசி : 0776034332