Your cart is empty.
ராஜ் கௌதமன்
பிறப்பு: 1950
ராஜ் கௌதமன் (பி. 1950 ) ராஜ் கௌதமன் (எஸ். கௌதமன்) விருதுநகர் மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தில் பிறந்தவர். அங்கேயே தொடக்கக் கல்வி கற்றார். மதுரையில் உயர்நிலைப்பள்ளிப் படிப்பையும் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் விலங்கியல் இளங்கலைப் பட்டமும் தமிழ் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டு அதை நன்கு கற்றறிந்தார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு கல்லூரிகளில் தமிழ் விரிவுரையாளராகப் பணிபுரிந்த இவர் புதுவை அரசு பட்டமேற்படிப்பு மையத்தில் தமிழ் ஆய்வுத் துறைத் தலைவராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ளார். பொதுவுடைமைச் சித்தாந்தம், தலித்தியம், நவீன தமிழ் இலக்கிய விமர்சனம், பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகம், சமூக வரலாறு, சங்க இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு உற்றுத் தொடர்ந்து அவை குறித்து எழுதிவருகிறார். 19-20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ச் சமூக நாவல் முன்னோடிகளில் ஒருவரான அ. மாதவையா படைப்புகள் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மனைவி : க. பரிமளம். மகள் : டாக்டர் நிவேதிதா, எம்.டி.