Your cart is empty.
ராஜம் கிருஷ்ணன்
பிறப்பு: 1925 - 2014
ராஜம் கிருஷ்ணன் (1925 - 2014) முசிறியில் பிறந்த ராஜம் கிருஷ்ணன், நாற்பது புதினங்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பெண் எழுத்தாளர்கள் என்றாலே குடும்பக் கதை எழுதுபவர்கள் என்ற பிம்பத்தை உடைத் தெறிந்தவர். கள ஆய்வு செய்து பல புதினங்களைப் படைத்தவர். குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தினர், பெண்கள், குழந்தைகள் இந்த அமைப்பில் சுரண்டப்படுவது குறித்து எழுதியிருக்கிறார். சாகித்திய அக்காதெமி விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, திரு.வி.க. விருது, சரஷ்வதி விருது போன்ற பல விருதுகளைப் பெற்ற இவரது படைப்புகள் ஜப்பானிய மொழி உட்படப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எளிய குடும்பத்தில் பிறந்து ஒரு பெண் என்ற வகையில் குடும்ப அமைப்பின் நெருக்கடிகளைச் சமாளித்து அதிலேயே தன் அடையாளத்தை இழந்துபோகாமல் ஒரு இலக்கியவாதியாகத் தன்னை விரிவுபடுத்திக் கொண்டவர் ராஜம் கிருஷ்ணன். சமூக அக்கறையினால் விளைந்த படைப்பூக்கமும் கடுமையான உழைப்பும் இலக்கிய உலகில் இவரது இடத்தை உறுதிசெய்கின்றன.