Your cart is empty.
ராஜ் ராஜரட்ணம்
பிறப்பு: 1957
1957இல் இலங்கையில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை இலங்கையிலும் இந்தியாவிலும் கற்றார். உயர்கல்வியை இங்கிலாந்தில் மேற்கொண்டு, சசெக்ஸ் பல்கலைக் கழகத்தில் பொறியியல் பட்டதாரியானார். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். சேஸ் மேன்ஹாட்டன் வங்கியில் நிதிப் பகுப்பாய்வாளராகத் தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தார்.
ராஜ் ராஜரட்ணம் அமெரிக்காவில் தலைமையகத்தைக் கொண்டிருந்த ‘கலியன் குழுமம்’ என்ற புகழ்பெற்ற முதலீட்டு நிதியத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் இருந்தவர்.
தனது வருவாயின் கணிசமான பகுதியை அறப்பணிகளுக்கு வழங்கினார். 2009இல் சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அமெரிக்கப் புலனாய்வுப் பணியகம் (FBI) ராஜ் ராஜரட்ணத்தைக் கைதுசெய்தது. அவரது நிறுவனத்தின் செயல்பாடுகளையும் முழுவதுமாக முடக்கியது. இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் சட்டப் போராட்டத்தைத் தொடுத்தார். அமெரிக்க நீதித்துறையையும் புலனாய்வு அமைப்பையும் அம்பலப்படுத்தும் இந்த நூலைச் சிறையில் இருந்தபடியே எழுதினார்.