Your cart is empty.
ரேமண்ட் கார்வர்
பிறப்பு: 1938 - 1988
ரேமண்ட் கார்வர் (1938 - 1988) ரேமண்ட் கார்வர் அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தின் கிளேட்ஸ்கெனியில் பிறந்தவர். அவரது தந்தை மரக்கடை ஊழியர். தாயார் மளிகைக் கடைகளிலும் உணவகங்களிலும் தற்காலிகப் பணியாளராக இருந்தவர். கார்வருக்கு இரு மனைவியர். முதல் மனைவி மரியன் பர்க். இத் தம்பதியினருக்கு வேன்ஸ் லின்ட்சே, கிரிஸ்டின் லாரே என இரண்டு குழந்தைகள். இரண்டாவது மனைவி கவிஞரான டெஸ்களாகர். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்காவின் முக்கியமான சிறுகதையாளராகவும் கவிஞராகவும் விளங்கியவர் கார்வர். 1980களில் நசிந்து போயிருந்த யதார்த்தவாதச் சிறுகதை மரபைப் பெரும் ஆற்றலுடன் மீண்டும் உயிர்ப்பித்தவர். எளிமையான சித்தரிப்பும் அலட்டலில்லாத மொழிநடையும் வாசிப்பில் எவ்வளவு ஆழங்களையும் சாத்தியங்களையும் உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியவர். ஆறு சிறுகதைத் தொகுப்புகள், ஏழு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் என அவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. அவரது நேர்காணல்கள் பலவும் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. அவரது கதைகளை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களும் உள்ளன. உலகச் சிறுகதை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கும் ரேமண்ட் கார்வரின் கதைகளை முதன்முதலாகத் தமிழில் தொகுப்பாகத் தரும் முயற்சி இது.