Your cart is empty.
ரிஸார்த் காபுஸின்ஸ்கி
பிறப்பு: 1932 - 2007
ரிஸார்த் காபுஸின்ஸ்கி (1932-2007) கவிஞர், பத்திரிகையாளர், புகைப்படக் கலைஞர். போலந்தின் கிழக்குப் பகுதியில் பிறந்தார். வார்ஸா பல்கலைக்கழகத்தில் போலந்து வரலாற்றைப் பயின்றார். செய்தியாளராகப் பணியாற்றத் தொடங்கி விரைவிலேயே போலிஷ் நியூஸ் ஏஜென்சியின் வெளிநாட்டுச் செய்தியாளராகப் பணிபுரிந்தார். 1956 – 81ஆம் ஆண்டுகளுக்கு இடையில் உலகில் நடைபெற்ற சமூக, அரசியல் மாற்றங்களைக் களத்திலிருந்து எழுதியதன் வாயிலாகப் புகழ்பெற்றார். அரசியல் புரட்சி, ஆட்சிக் கவிழ்ப்பு, மக்களின் கலகம் உள்ளிட்ட 27 நிகழ்வுகளைச் சாகசமாக எதிர்கொண்டார். அந்த அனுபவங்களை இலக்கியத் தரமான நூல்களாக அளித்தார். பல விருதுகளைப் பெற்ற காபுஸின்ஸ்கி நோபல் இலக்கியப் பரிசுக்கும் பரிந்துரைக்கப்பட்டவர். 2007ஆம் ஆண்டு எழுபத்தைந்தாம் வயதில் வார்ஸாவில் காலமானார்.