Your cart is empty.
பக்தவத்சல பாரதி
பிறப்பு: 1957
பக்தவத்சல பாரதி (பி. 1957) முப்பத்தைந்து ஆண்டுகளாக மானிடவியல் புலத்தில் பங்காற்றி வருபவர். இதுவரை 14 நூல்களை எழுதியும் 10 நூல்களைப் பதிப்பித்தும் மொழி பெயர்த்தும் உள்ளார். ‘பாரதியின் பண்பாட்டு மானிடவியல்’, ‘தமிழ் மானிடவியலின் விவிலியம்’. ‘தமிழர் மானிடவியல்’, ‘திராவிட மானிடவியல்’, இன்றைய தமிழ்ச் சமூகம் ஆகிய நூல்கள் தமிழ்ச் சமூகத்தின் இருத்தலைப் பேசுபவை. தமிழகப் பழங்குடிகள், தமிழகத்தில் ‘நாடோடிகள்’, ‘மலைவாசம்’, ‘வரலாற்று மானிடவியல்’ ஆகியவை விளிம்புநிலை, பின்காலனியம் சார்ந்தவை. ‘தமிழர் உணவு’, ‘சாதியற்ற தமிழர்-சாதியத் தமிழர்’, ‘பண்பாட்டு உரையாடல்’ ஆகிய நூல்கள் தமிழ்ச் சூழலில் புதிய விவாதங்களைப் பேசு பொருளாக்கியுள்ளன. ‘இலங்கையில் சிங்களவர்’ எனும் பாரதியின் மிக முக்கியமான நூல் சிங்கள மரபு தமிழ் மரபிலிருந்து கிளைத்துப் பிரிந்த உருவ நீட்சி என்பதை நிறுவியுள்ளது. இலங்கை-இந்திய மானிடவியல் இந்தப் புலத்தில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஒப்பியல் ஆய்வாகும். ‘இலக்கிய மானிடவியல்’, ‘பாணர் இனவரைவியல்’, ‘கி.ரா.வின் கரிசல் பயணம்’ ஆகிய நூல்கள் தமிழிலக்கியப் பரப்பில் மானிடவியல் சொல்லாடலை முன் வைக்கின்றன. சோழமண்டல மீனவர், நரிக்குறவர் பற்றிய பாரதியின் இரண்டு ஆங்கில நூல்கள் மேற்குலக அறிஞர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. இவருடைய பங்களிப்பிற்காக இதுவரை பன்னிரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
சங்ககாலத் தமிழர் உணவு
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன் எடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர் மேலும்
சங்ககாலத் தமிழர் உணவு
முனைவர் பக்தவத்சல பாரதி தமிழ்ச் சூழலின் மானிடவியலை முன் எடுத்தவர். மானிடவியலை முறையாகப் படித்தவர் மேலும்
கி.ரா.வின் கரிசல் பயணம்
பண்டைத் தமிழ் இலக்கியங்களை இனவரைவியல் அடிப்படையில் ஆராய்ந்து புதிய பார்வையை முன் வைத்தவர் பக்தவத் மேலும்
திராவிட மானிடவியல்
ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை மேலும்