Your cart is empty.
சு. இராசாராம்
பிறப்பு: 1942
சு. இராசாராம் (பி. 1942) இராசாராம் நாகர்கோவிலில் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் டாக்டர் பட்டம் பெற்று மைசூர் இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்திலும், தமிழ்ப் பல்கலைக்கழக இந்திய மொழிகள் பள்ளியிலும் பணியாற்றிப் பேராசிரியராக நிறைவு பெற்றவர். கோட்பாட்டு மொழியியல், கல்வி மொழியியல், தமிழ் மரபிலக் கணங்கள் ஆகியவற்றில் ஆய்வுத் திட்டங்கள் மேற்கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். வீரசோழிய இலக்கணக் கோட்பாடு, இலக்கணவியல் என்பன மரபிலக்கண ஆய்வின் முன்னோடி நூல்கள். இணையவழிச் செவ்வியல் இலக்கியம், செவ்வியல் இலக்கணக் கலைச்சொல் இணையக் களஞ்சியம் முதலிய ஆய்வுத் திட்டங்களில் தற்போது ஈடுபட்டுள்ளார்.