Your cart is empty.
எஸ்.ஏ.வி. இளஞ்செழியன்
பிறப்பு: 1965
எஸ்.ஏ.வி. இளஞ்செழியன் (பி. 1965) எஸ்.ஏ.வி. இளஞ்செழியன் பாரம்பரியச் சிற்பக்கலையைப் பின்னணியாகக் கொண்டவர். இவரின் முதன்மை ஊடகங்கள் ஓவியமும் சிற்பமும். சென்னை அரசு கவின் கலைக்கல்லூரியில் நுண்கலைகளில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர். வரலாற்றுத் துறையிலும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். நாட்டின் முதன்மைப் பெருநகரங்களில் கலைக்கண்காட்சிகளை நடத்தியுள்ளார். ஆய்வு - உயர்கல்வியைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சிற்பத்துறையில் மேற்கொண்டு, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பன்னிரண்டிற்கும் மேற்பட்ட கலை வரலாற்று ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டுள்ளார். ‘க்மெர்’ (Khmer) கலையை ஆய்வு செய்ய கம்போடியா நாட்டிற்குச் சென்று ‘அங்கோர்வாட்’ கோயிலைக் குறித்த ஓர் ஆய்வுக்கட்டுரையையும் வெளியிட்டுள்ளார். இவை தவிர தமிழில் மூன்றும் ஆங்கிலத்தில் ஒன்றும் எனக் கலை வரலாற்று ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். மின்னஞ்சல்: sav.elanchezian6@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தமிழரின் உருவ வழிபாடு
-தமிழரின் உருவ வழிபாட்டு மரபினுள் புதைந்து கிடக்கும் அரிய வரலாற்று உண்மைகளைப் பிரித்தறியத் தவறியு மேலும்
தமிழரின் உருவ வழிபாடு
தமிழரின் உருவ வழிபாட்டு மரபினுள் புதைந்து கிடக்கும் அரிய வரலாற்று உண்மைகளைப் பிரித்தறியத் தவறியுள மேலும்
சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்
காஞ்சிபுரத்தின் புகழ்பெற்ற திருப்பாடகம், திருவூரகம் கோயில்களின் விஸ்வரூபச் சிற்பங்களைக் குறித்த க மேலும்