Your cart is empty.
சா. பாலுசாமி
பிறப்பு: 1958
சா. பாலுசாமி (பி. 1958) சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழ்த் துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஆசியாவின் கிறித்துவ உயர் கல்விக்கான ஒன்றிய வாரியத்தின் உதவியுடன் சென்னை - மாமல்லபுரம் இடையிலான கிழக்குக் கடற்கரை மீனவர் வழக்காற்றியல், தாம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உலகமயமாக்கலின் தாக்கம் ஆகிய ஆய்வுத் திட்டங்களையும், ஃபோர்டு நிதி நல்கையுடன் தமிழகச் சுவரோவியங்கள் ஆவணத் திட்டத்தையும் நிறைவேற்றியுள்ளார். இலக்கியம், ஓவியம், சிற்பம், நாட்டுப்புறவியல் துறைகளில் ஈடுபாடுகொண்ட இவர் பாரதிபுத்திரன் என்னும் புனைபெயரில் படைப்பிலக்கியமும் திறனாய்வுக் கட்டுரைகளும் எழுதிவருகிறார். மின்னஞ்சல்: nayakarts@gmail.com, அலைபேசி: 9444234511
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
நாயக்கர் காலக் கலைக் கோட்பாடுகள்
தமிழகத்தினை ஆட்சி செய்த நாயக்க மன்னர்களின் மூன்று நூற்றாண்டு காலக் கலைப் படைப்புகள் மற்றும் இலக்க மேலும்
மாமல்லபுரம்: புலிக்குகையும் கிருஷ்ணமண்டபமும்
மாமல்லபுரம் சாளுவன் குப்பத்திலுள்ள புலிக்குகை உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத விந்தையான பட மேலும்
அர்ச்சுனன் தபசு
உலகக் கலைவெளியில் மாபெரும் சிற்பச் சாதனையாகக் கருதப்படுபவை மாமல்லபுரத்துச் (கடல் மல்லை) சிற்பத் த மேலும்