Your cart is empty.

சா. கந்தசாமி
பிறப்பு: 1940
சா. கந்தசாமி (1940) தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். 25வது வயதில் ‘சாயாவனம்’ நாவலை எழுதினார். 1969இல் வெளிவந்தது. 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 11 நாவல்களையும் எழுதியிருக்கிறார். நுண்கலைகள், ஆவணப் படங்களில் ஆர்வம் கொண்டவர். சுடுமண் சிலைகள் பற்றிய இவரது ஆவணப் படம் சர்வதேச விருது பெற்றது. ‘சாயாவனம்’ மற்றும் இவரது ‘சூரிய வம்சம்’, ‘விசாரணைக் கமிஷன்’ ஆகியவை ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘விசாரணைக் கமிஷன்’ நாவலுக்காக 1998இல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஈ மெயில் முகவரி:sakandasamy@gmail.com