சை. பீர்முகம்மது (1942)
கோலாலம்பூரில் பிறந்தவர். 1959 முதல் எழுதிவரும் இவரின் நூல்கள் ‘வெண்மணல்’ (1984, 1994, சிறுகதைகள்), ‘பெண் குதிரை’ (1997, நாவல்), ‘கைதிகள் கண்ட கண்டம்’ (1997, ஆஸ்திரேலியப் பயண நூல்), ‘மண்ணும் மனிதர்களும்’ (1998, வரலாறும் இந்தியப் பயணமும்).
மலேசிய இலக்கியத்தை உலகப்பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கொள்கையின் வெளிப்பாடாக 93 மலேசிய எழுத்தாளர்களின் ஐம்பதாண்டுக் காலச் சிறுகதைகளை ‘வேரும் வாழ்வும்’ என்ற பெயரில் மூன்று தொகுதிகளாக வெளிக்கொண்டுவந்துள்ளார். ‘மலேசியத் தமிழர்களின் வாழ்வும் இலக்கியமும்’ என்ற கட்டுரைத் தொகுப்பையும் நூலாக்கியுள்ளார்.
கட்டுமானத்துறையில் தனது நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராகவும் இருக்கும் இவர் குடும்ப உணவகங்களையும் நடத்திவருகிறார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர், உதவித் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை வகித்துள்ள இவர் மலேசிய இந்தியக் குத்தகையாளர்கள் சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
முகவரி: 38-JALAN SELASEH - 19
Taman Sebaseh - II
68100 - Batu Caves, Malaysia
Cell: 6012-3826312