Your cart is empty.
ஸான்ட்ரா கால்னியடே
பிறப்பு: 1952
ஸான்ட்ரா காலனியடே தங்கள் நாடான லாட்வியாவிலிருந்து வெகு தூரம் வாழ்நாளுக்கும் நாடுகடத்தப்பட்ட பெற்றோர்களுக்கு ஸைபீரிய கிராமம் ஒன்றில் 1952ல் பிறந்த ஸான்ட்ரா கால்னியடே தன் வாழ்நாளில் கடந்திருக்கும் தூரம் வெகு அதிகமானது. ஸ்டாலினின் மரணத்துக்குப் பின் 1957ல் அவர் பெற்றோர்களுக்கும் அவருக்கும் லாட்வியா திரும்ப அனுமதி கிடைக்கிறது. கலை வரலாற்றில் கல்வி பெற்றிருந்தாலும் ஸான்ட்ரா தன் வாழ்வின் பெரும் பகுதியை அரசியலிலும் அரசனயத்திலுமே கழித்திருக்கிறார். லாட்விய பொதுமக்கள் முன்னணியின் துணைத் தலைவராகவும் அதன் ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு லாட்வியச் சுதந்திரத்தை மீண்டும் பெறும் முயற்சிகளில் 1980களிலும் 1990களிலும் முன்னணியில் நின்றவர். 1993 – 1997 ஆண்டுகளில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கும் 1997 – 2002 ஆண்டுகளில் பிரான்ஸ் நாட்டுக்கும் லாட்விய வெளிநாட்டுத் தூதராக இருந்தார். 2002இல் ஓராண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் (UNESCO) லாட்விய வெளிநாட்டுத் தூதராக இருந்தார். 2002ல் பரவலாக நேட்டோ (NATO) என அறியப்படும் வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பிலும் (North Atlantic Treaty Organization) ஐரோப்பிய ஒன்றியத்திலும் லாட்வியா இணையும் இறுதிக் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்தபோது லாட்வியாவின் வெளிநாட்டு மந்திரியாக பதவியேற்றார். 2004ம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் லாட்விய ஆணையரானார். அவர் செய்த பணியைப் பாராட்டிப் பல லாட்விய மற்றும் வெளிநாட்டு விருதுகளைப் பெற்றவர். லாட்வியா மொழியில் எழுதி 2000ல் வெளிவந்த ‘அரக்கனை வீழ்த்தப் பாடல்’ (Song to Kill a A Giant) நூலும் 2001ல் வெளிவந்த ‘ஸைபீரியப் பனியில் நடனக் காலணியுடன் . . .’ (With Dance Shoes in Siberian Snows . . .) நூலும் அனைத்துலகக் கவனத்தை ஈர்த்து, பலரும் அறியாத அல்லது தவறாக அறிந்துகொண்ட லாட்விய நாட்டின் சரியான வரலாற்றை உலகுக்கு எடுத்துச் சொல்லும் முயற்சிகளாக அமைந்தன. லாட்விய வரலாற்றுடன் இணைக்கப்பட்டு அவர் குடும்ப நினைவுகள் கூறப்படும் இரண்டாவது நூல் சமீப காலத்தில் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட லாட்விய நூலாக இருக்கிறது.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஸைபீரியப் பனியில் நடனக் காலனியுடன் . . .
-ஐரோப்பாவின் வரலாற்றில் பால்டிக் நாடுகளின் தனிப்பட்ட வரலாறு புதையுண்டிருக்கிறது என்பது அதிகம் கணி மேலும்
ஸைபீரியப் பனியில் நடனக் காலனியுடன் . . .
ஐரோப்பாவின் வரலாற்றில் பால்டிக் நாடுகளின் தனிப்பட்ட வரலாறு புதையுண்டிருக்கிறது என்பது அதிகம் கணிப மேலும்