Your cart is empty.
சஞ்சய் சுப்ரமணியன்
பிறப்பு: 1968
கர்னாடக இசையின் புதிய தலைமுறைக் கலைஞர்களில் முதன்மையான இடம் வகிப்பவர்களில் ஒருவர். வயலின் கலைஞராகப் பயின்று வாய்ப்பாட்டுக் கலைஞராகப் புகழ்பெற்றிருப்பவர். மரபிசையை நவீனப்படுத்திப் பெருவாரி மக்களின் ரசனைக்குரியதாக்கியவர். செவ்வியல் பாடகராக மட்டுமில்லாமல் இசையின் பிற வடிவங்களிலும் பரிசோதனை செய்திருப்பவர். இசை உருப்படிகளை எழுதியிருக்கிறார். மெட்டுகளை உருவாக்கியிருக்கிறார். தேர்ந்த வாசகர். எழுத்தாளர்.
மும்பை சண்முகானந்த சபையின் தேசிய மதிப்புறு விருதை 2014இலும் கர்னாடக இசைக் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் உயரிய விருதான மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருதை 2015இலும் பெற்றார். சென்னை, தமிழிசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர், இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸின் கலாசிகாமணி விருதுகளையும் பெற்றார். இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் உலக நாடுகளிலும் தொடர்ந்து கச்சேரிகளை நிகழ்த்திவருகிறார். திரைப்படங்களுக்கும் தனியிசைத் தொகுப்புகளுக்கும் பாடுகிறார். சென்னையில் வசிக்கிறார்.
