Your cart is empty.
சதீஷ் சப்பரிகே
பிறப்பு: 1968
பத்திரிகையாளர், எழுத்தாளர், நாவலாசிரியர். உடுப்பி மாவட்டத்தின் குந்தாபூர் தாலுகாவின் சப்பரிகேவிலுள்ள விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கன்னடப் பத்திரிகை வரலாற்றில் ‘பிரிட்டிஷ் ஷிவ்னிங் ஸ்காலர்ஷிப்’ பெற்ற ஒரே பத்திரிகையாளரான சதீஷ், லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் தொழில் பயின்றார். பிரஜாவாணி நாளிதழில் தனது பத்திரிகை வாழ்க்கையைத் தொடங்கினார். சுமார் பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பிறகு, ‘டிவி 9’, தி சண்டே இந்தியன் பத்திரிகைகளுக்கு உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் தொழிலிலிருந்து விடைபெற்று, கடந்த ஆறு ஆண்டுகளாக பெங்களூருவைத் தளமாகக் கொண்ட சர்வதேச அமைப்பான ‘ஃபார்பென்டன் கம்யூனிகேஷன் பிரைவேட் லிமிடெட்’டின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றிவருகிறார். பிரஜாவாணி, ஹஃபிங்டன் போஸ்ட் (ஆங்கிலம்) ஆகியவற்றில் பல பத்திகளை எழுதியுள்ளார்.
சதீஷ் சப்பரிகே, ‘மத்தொன்து மௌனகனிவே’ (சுற்றுச்சூழல் கட்டுரைகள்), ‘ஹசிரு ஹாதி’ (எ.என். யல்லப்ப ரெட்டியின் வாழ்க்கை வரலாறு), உலகக் கோப்பை கிரிக்கெட் (கிரிக்கெட் பற்றிய நூல்), பேரு (சிறுகதைகள்), தேம்ஸ் தடத தவக தல்லனா (பயணக் கட்டுரைகள்), தேவகாரு (கட்டுரைகள்), முசாஃபிர் (பத்திகள்), ‘காஞ்சி பாய்: வாழ்க்கை வரலாறு’ போன்ற படைப்புகளை வெளியிட்டுள்ளார். இவற்றில், ‘தேம்ஸ் தடத தவக தல்லனா’ கர்நாடக சாகித்திய அகாதெமி புத்தக விருதை வென்றது. பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது இரண்டாவது கதைத் தொகுப்பான ‘கன்ஜின் மோஹிடோ’ 2020இல் வெளியானது. அவரது முதல் நாவலான ‘காந்த்ருக்’ 2023இல் அங்கிதா புக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
தற்போது புக் பிரம்மா பிரைவேட் லிமிடெட் என்ற கன்னட இலக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஓர் உலகளாவிய எண்ணிமத் தளத்தின் தலைவராக இருக்கிறார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
காந்த்ருக் (இ-புத்தகம்)
வாழ்வதற்கான காரணங்கள் நிறையவே இருக்கின்றன; ஆனால் வாழ்ந்ததற்கான பொருள் இருக்கிறதா என்று தேடுவதுதான மேலும்

