Your cart is empty.
சிலம்பு நா. செல்வராசு
பிறப்பு: 1955
சிலம்பு நா. செல்வராசு (பி. 1955) புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். சங்க இலக்கியம், காப்பியங்கள், நாட்டுப்புறவியல் முதலிய துறைகளில் முதன்மையான பங்களிப்பைச் செய்தவர். முப்பது நூல்கள், எண்பத்தைந்து பதிப்பு நூல்கள், இருநூறு கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பதினான்கு ஆய்வுத் திட்டங்களை நிறைவு செய்துள்ளவர். இவரது ஆராய்ச்சி நூல்களுக்குத் தமிழ்நாடு அரசு, புதுவை அரசு, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முதலிய நிறுவனங்கள் விருதுகள் வழங்கியுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகள், பயிலரங்குகள் முதலியவற்றை ஒருங்கிணைத்தவர். சமூகவியல், சமூக மானுடவியல் நோக்கிலான சங்க இலக்கிய ஆய்வுகள் மூலம் தனிக்கவனம் பெற்றிருப்பவர். இதே அணுகுமுறைகளின் வழித் தொல்காப்பியப் புலமையாளராகவும் விளங்குபவர். இவருக்குப் புதுச்சேரி அரசு, தமிழ்மாமணி விருதினை அண்மையில் அறிவித்துள்ளது. மின்னஞ்சல்: silampu1955@gmail.com