Your cart is empty.
சித்துராஜ் பொன்ராஜ்
பிறப்பு: 1973
சித்துராஜ் பொன்ராஜ் (பி. 1973) சித்துராஜ் பொன்ராஜ் (Sithuraj Ponraj) தமிழ், ஆங்கிலம், ஸ்பானிய மொழிகளில் கதை, கவிதை எழுதி வருகிறார். அவருடைய முதல் தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பான ‘மாறிலிகள்’ தமிழ்ப் புனைவுப் பிரிவில் 2016ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கியப் பரிசையும் அவருடைய முதல் தமிழ்க் கவிதைத் தொகுதி ‘காற்றாய் கடந்தாய்’ அதே ஆண்டு சிங்கப்பூர் இலக்கிய தமிழ்க் கவிதைப் பிரிவில் தகுதிப் பரிசையும் வென்றன. தமிழில் ‘பெர்னுலியின் பேய்கள்’ என்ற நாவலையும் இரண்டு சிறுவர் நாவல்களையும் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் இவரது முதல் கவிதைத் தொகுதியான ‘The Flag Party’ 2017ஆம் ஆண்டின் இறுதியில் வெளிவந்தது. இவருடைய ஸ்பானியக் குறுங்கதைத் தொகுப்பு 2018 ஜனவரியில் வெளிவரவிருக்கிறது. மின்னஞ்சல்: sithurajponraj134@gmail.com