Your cart is empty.
சு. சிவா
பிறப்பு: 1980
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் பிறந்தவர். நாகர்கோவில் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரியில் இளங்கலை கல்வி பயின்ற இவர், தனது முதுகலை, முனைவர் பட்டங்களைக் கேரளப் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். இவர் தற்பொழுது தில்லிப் பல்கலைக்கழகத்தில் நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத் துறையில் தமிழ் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். தமிழ்ச் செம்மொழி வரலாறு, டாக்டர் எஸ். பத்மநாபன், கல்வெட்டுக்களில் அளவைக் குறியீடுகள், கல்வெட்டுக்களில் உழைப்பும் கூலியும், குமரி மாவட்டக் கல்வெட்டுக்களில் மொழியாய்வு, சுவேதாம்பரர், பழந்தமிழர் பண்பாட்டுப் பதிவுகள் (தொகுப்பாசிரியர்) ஆகிய நூல்களை இதுவரை வெளியிட்டுள்ளார். கல்வெட்டுப் பெயர்ச் சொல்லகராதி எனும் நூல் விரைவில் வெளிவரவிருக்கிறது.