Your cart is empty.
சிவகாமி
பிறப்பு: 1957
எழுத்தாளர், இதழாளர், அரசியல்வாதி. இந்திய ஆட்சிப் பணியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஆறு நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு கவிதைத் தொகுப்புகள், இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. பழையன கழிதலும், ஆனந்தாயி, குறுக்கு வெட்டு ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சாகித்திய அகாதமிக்காகத் ‘தலித் சிறுகதைத் தொகுப்பு’ என்னும் நூலைத் தொகுத்துள்ளார். 1995முதல் இலக்கிய இதழான புதிய கோடாங்கியில் கட்டுரை, சிறுகதைகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். ஓவியர் சந்ரு எழுதிய சிறுகதையொன்றை ‘ஊடாக’ என்ற பெயரில் குறும்படமாக இயக்கினார். இப்படத்திற்கு இசை இளையராஜா. இது 1995இல் குடியரசுத்தலைவர் விருதைப் பெற்றது. நீலம் பண்பாட்டு மையம் வழங்கும் வேர்ச்சொல் இலக்கிய விருதை 2025ஆம் ஆண்டு பெற்றார்.
மின்னஞ்சல்: psivakami@gmail.com
