சொஹைலா அப்துலலி மும்பையில் பிறந்தவர்.பிராண்டைஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியல் மற்றும் சமூகவியல் துறைகளில் இளங்கலைப்பட்டமும் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் தொடர்பியல் துறையில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார். இரண்டு நாவல்களும் குழந்தைகளுக்கான புத்தகங்களும் சிறுகதைகளும் எழுதியுள்ளார். தற்போது தனது குடும்பத்துடன் நியூயார்க் நகரில் வசிக்கிறார்.