Your cart is empty.
சுநேத்ரா ராஜகருணாநாயக
பிறப்பு: 1954
சுநேத்ரா ராஜகருணாநாயக
ஊடகவியலாளர், ஊடக ஆலோசகர், ஆவணப்பட இயக்குநர், நாடகாசிரியர், நடிகர், சஞ்சிகை ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர், வானொலி அறிவிப்பாளர், நாவலாசிரியர், கவிஞர், தியான ஆசிரியர் என பன்முகங்களைக் கொண்டவர்.
சிங்களம் மட்டுமல்லாது ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். இவரது நாவல்கள் திரைப் படங்களாகவும், தொலைக்காட்சி நாடகங்களாகவும் வெளிவந்துள்ளன. படைப்புகளுக்காகச் சாகித்திய விருதுகளையும், அரச விருதுகள் உட்படப் பல விருதுகளையும் வென்றுள்ளவர். ‘புத்ததாசி’ நாவலுக்காக All Ceylon Buddhist Congress விருது பெற்றார். இவ்வருடத்துக்கான (2011) தேசிய ‘சுவர்ண புஸ்தக’ விருதோடு ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பண முடிப்பையும் பெற்றுள்ளார். இதுவரை ஏறத்தாழ 47 தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். இவரது குறிப்பிடத்தகுந்த பல படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
அம்மாவின் ரகசியம்
பெண் வாழ்க்கையின் இடுக்குகளில் பொதிந்து கிடக்கின்றன பல ரகசியங்கள். அவை பல சமயம் அங்கேயே கிடந்து மேலும்