Your cart is empty.
சில்வியா பிளாத்
சில்வியா பிளாத் சில்வியா பிளாத் அமெரிக்காவில் மஸசுஸெட்ஸ் மாகாணத்தில் பிறந்தார். சிறந்த உளவெளிப்பாட்டுக் கவிஞராகவும் பெண்ணியக் கவிஞராகவும் அறியப்படுபவர். பிளாத் உயிரோடிருக்கும்போது வந்த ஒரே கவிதைத் தொகுப்பு ‘மாபெரும்சிலையும் மற்ற கவிதைகளும்’ (Colossus and Other Poems). ‘மணி ஜாடி’ (The Bell Jar, 1963) என்ற ஒரே நாவலை விக்டோரியா லூகஸ் என்னும் புனைபெயரில் வெளியிட்டார். அவர் இறந்தபின் ‘ஏரியல்’ (Ariel, 1966), ‘நீரைக் கடப்பது’ (Crossing The Water, 1971), ‘சில்வியா பிளாத்தின் கவிதைத் திரட்டு’ (The Collected Poems of Sylvia Plath, 1982) ஆகிய தொகுப்புகளை அவரது கணவர் கவிஞர் டெட் ஹியூஸ் வெளியிட்டார். ‘சிலவியா பிளாத்தின் கவிதைத் திரட்டு’ என்ற நூல் 1982ஆம் ஆண்டிற்கான புலிட்சர் பரிசு பெற்றது. அவர் எழுதிய நாட்குறிப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புத்தகமாக ‘சில்வியா பிளாத்தின் நாட்குறிப்புகள்’ என்ற பெயரிலும் (1982) பின் முழுமையான நாட்குறிப்புத் தொகுதி 2000ஆம் ஆண்டும் வெளிவந்தன. அவரது கடிதங்களை ‘வீட்டிற்கு எழுதிய கடிதங்கள்’ (Letters Home: Correspondence, 1950 – 63) என்ற தலைப்பில் 1975இல் அவரது தாய் ஆரலியா பிளாத் வெளியிட்டார்.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தற்கொலைக்குப் பறக்கும் பனித்துளி
‘மரணித்தல் ஒரு கலை, மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாகச் செய்கிறேன்’ என்று எழுதியவர் மேலும்