Your cart is empty.
தமிழ்நதி
தமிழ்நதி கலைவாணி என்ற இயற்பெயருடைய தமிழ்நதி, திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ் பல்கலைக்கழகத்தில் பயின்று கலைத்துறையில் பட்டம் பெற்றவர். 1992ஆம் ஆண்டில் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தவர். கனடாவில் வாழ்ந்த காலத்தில் கலைவாணி இராஜகுமாரன் என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தற்காலிகமாக சென்னையில் வாழ்ந்துவரும் தமிழ்நதியின் ‘சூரியன் தனித்தலையும் பகல்’ (கவிதைகள்), ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’ (சிறுகதைகள்), ‘இரவுகளில் பொழியும் துயரப்பனி’ (கவிதைகள்), ‘கானல் வரி’ (குறுநாவல்) ஆகிய நூல்கள் வெளிவந்திருக்கின்றன. மின்னஞ்சல்: tamilnathy@gmail.com வலைத்தளம்: tamilnathy.blogspot.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்
ஈழத்தின் நிகழ்வுகள், தமிழகத்தின் எதிர்வினைகள் ஆகியவற்றை ஊடும் பாவுமாகக்கொண்ட தமிழ்நதியின் அரசியல மேலும்