Your cart is empty.
தாமரைச்செல்வி
பிறப்பு: 1953
தாமரைச்செல்வி (பி. 1953) இயற்பெயர் ரதிதேவி கந்தசாமி. இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பரந்தனில் பிறந்தார். 1973இலிருந்து எழுதிவருகிறார். இதுவரையில் 200க்கு மேற்பட்ட சிறுகதைகளும் மூன்று குறுநாவல்களும் ஆறு நாவல்களும் எழுதியுள்ளார். வட கிழக்கு மாகாண சபை விருது (‘ஒரு மழைக்கால இரவு’), யாழ் இலக்கியப் பேரவையின் பரிசு (‘விண்ணில் அல்ல விடிவெள்ளி’, ‘தாகம்’, ‘பச்சை வயல் கனவு’), இலங்கை அரசின் சாகித்திய விருது (‘பச்சை வயல் கனவு’), தமிழ்நாடு சின்னப்பா பாரதி அறக்கட்டளை விருது 2010, சுதந்திர இலக்கிய அமைப்பின் விருது (‘தாகம்’) கொழும்பு கலை இலக்கிய கழகத்தின் விருது 2003, வடகிழக்கு மாகாண சபையின் ஆளுநர் விருது 2001 உட்படப் பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றவர். இவருடைய கதைகள் ஆங்கிலம், சிங்களம், ஜெர்மன் மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. ஆறு சிறுகதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. ஈழத்தின் கவனத் திற்குரிய பெண் எழுத்தாளர். புலம்பெயர்ந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்கின்றார். மின்னஞ்சல்: kanthurathy@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
வன்னியாச்சி
ஈழத்துப் புனைகதைஞர்களில் ஐந்தாம் தலைமுறை எழுத்தாளர்களுள் தாமரைச்செல்வியின் பங்கும் பணியும் மிக மு மேலும்