Your cart is empty.
தோப்பில் முஹம்மது மீரான்
தோப்பில் முஹம்மது மீரான் (1944 - 2019) குமரி மாவட்டத்தின் கடற்கரைக் கிராமமான தேங்காப்பட்டணம் இவரின் சொந்த ஊர். தந்தை முஹம்மது அப்துல் காதர். தாயார் முஹம்மது பாத்திமா. தோப்பு என்பது இவரின் வீட்டுப் பெயர். தேங்காப்பட்டணம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அம்சி உயர்நிலைப் பள்ளியிலும், நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழ் தாய்மொழி. கல்வி பயின்றது மலையாளத்தில். தமிழில் ஆறு நாவல்களும் ஏழு சிறுகதைத் தொகுப்புகளும், மலையாளத்தில் இரண்டு நாவல்களும் மலையாளச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றும் வெளி வந்துள்ளன. சாகித்திய அகாதெமி விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Crossword Book Award’க்குப் பரிந்துரை செய்யப்பட்டது. தோப்பில் முஹம்மது மீரான் 10.05.2019 அன்று திருநெல்வேலியில் காலமானார். மனைவி: ஜலீலா. மகன்கள்: ஷமிம் அகமது, மிர்ஷாத் அகமது.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் ம மேலும்
துறைமுகம்
ஒவ்வொரு வாழ்வும் அதற்கேற்ற விளைவுகள், அலைவுகளைக் கொண்டவை. கடலில் பேரலைகளெனில் குளத்தில் சிற்றலைகள மேலும்
கூனன் தோப்பு
விபர சூட்சுமங்களோடும் அதன் அடுக்குகளோடும் தனக்கு முற்றாகத் தெரிந்த ஒரு அனுபவ உலகத்தையே மீரான் வெள மேலும்
அஞ்சுவண்ணம் தெரு
உருவமும் அருவமுமாக ஒன்றிலொன்றாய்ப் பின்னி வாழ்வோரைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட அபூர்வமான படைப்பு. மேலும்
குடியேற்றம்
பதினாறு, பதினேழாம் நூற்றாண்டு களில் இந்தியாவின் கிழக்கு, மேற்குக் கடற்கரைகளில் வாழ்ந்த மரைக்காயர் மேலும்
சாய்வு நாற்காலி
இந்திரிய சுகங்களுக்கு அடிமையான நிலவுடைமைச் சமூகத்தின் கடைசிக் கண்ணியான முஸ்தபாக்கண்ணிடம், சக்கோலி மேலும்
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
ஆகப்பெரிய வாழ்க்கைக்கு முயலாதவர்களை வாழத் தகுதியற்றவர்களென ஒதுக்க முயல்கிறது சமூகம். அத்தகையவர்கள மேலும்