Your cart is empty.
டோபி வால்ஷ்
பிறப்பு: 11 - 4 - 1964
டோபி வால்ஷ் (Toby Walsh) உலகின் முன்னணிச் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். இவர் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் (University of New South Wales) செயற்கை நுண்ணறிவுப் பேராசிரியராகவும், அதன் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனம் UNSW.aiஇல் தலைமை அறிவியலாளராகவும் பணியாற்றுகிறார். தி நியூ யார்க் டைம்ஸ் (The New York Times) போன்ற பத்திரிகைகள் இவரைப் பற்றி எழுதியுள்ளன.
வெகுஜன மக்களுக்குப் புரியும் வகையில், Machines Behaving Badly, Faking It: Artificial Intelligence in a Human World உட்பட, செயற்கை நுண்ணறிவு குறித்த நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். ஹம்பால்ட் பரிசு (The Humboldt Prize), அறிவியல் புரிதலை ஊக்குவிப்பதற்கான செலஸ்டினோ யூரேகா பரிசு (Celestino Eureka Prize) உட்படப் பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். இவருடைய X பக்கம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் செய்திகளையும் அறிந்துகொள்வதற்காகப் பின்தொடர வேண்டிய சிறந்த பத்து X கணக்குகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
