Your cart is empty.
உமா வரதராஜன்
பிறப்பு: 1956
உமா வரதராஜன் (பி. 1956) கிழக்கிலங்கையின் பாண்டிருப்பில் பிறந்தவர். தாத்தா உடையப்பா, தந்தை மாணிக்கம் ஆகியோரின் முதலெழுத்துக்களை இணைத்து உமா வரதராஜன் ஆனார். கலை, இலக்கியம், ஊடகத் துறைகளில் 46 வருடங்களாக இயங்கி வருபவர். ஈழ இலக்கியச் சிற்றிதழ்கள் சிலவற்றுக்கு ஆசிரியராக இருந்தவர். கலை இலக்கியத்துறை சார்ந்து மாகாண, மத்திய அரசுகள் வழங்கிய விருதுகளைப் பெற்றுள்ளார். ‘உள்மன யாத்திரை’ சிறுகதைத் தொகுப்பு 1988-89ஆம் ஆண்டுக்கான இலங்கை, வடக்கு - கிழக்கு மாகாண சபை விருதைப் பெற்றது. இவரது சில படைப்புகள் ஆங்கிலம், ஜெர்மன், சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘மூன்றாம் சிலுவை’ நாவல் 2009இலும், ‘உமா வரதராஜன் கதைகள்’ 2011இலும் வெளியாகின. முகவரி: பாண்டிருப்பு-01, கல்முனை, இலங்கை தொலைபேசி: 0094 772852572 மின்னஞ்சல்: umavaratharajan@gmail.com
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
மோகத்திரை
உமா வரதராஜனுக்கு சினிமா ‘மனக்கடலின் உள் நதி நீரோட்டம்’. வாழ்க்கையின் இனிய தருணங்களிலும் துயர நிமி மேலும்


