Your cart is empty.
உமாதேவி
பிறப்பு: 1983
உமாதேவி (பி. 1983) திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் அத்திப்பாக்கம் கிராமத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெற்றோர் து. குப்பன் - க. இந்தியராணி அம்மாள். ‘பண்டைய இலக்கியங்களில் அறநெறிகளும் குண்டலகேசியும்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தற்போது உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் மூலமாகப் பாடலாசிரியராகித் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர். சிற்றிதழ்கள், வெகுசன இதழ்களில் கவிதை, கட்டுரை மூலமும் பள்ளிகள், கல்லூரிகள், சமூக விடுதலை இயக்கங்களின் இலக்கிய மேடைகள் மூலமும் பெண்ணிய பவுத்தச் சிந்தனைகளை விதைத்துக்கொண்டு வருபவர். இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘திசைகளைப் பருகியவள்’.
நூலாசிரியருடன் தொடர்புடைய புத்தகங்கள்
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
பவுத்த அடையாளங்களை மீளுருவாக்கம் செய்கிற உமாதேவியின் கவிதைகள் பண்பாட்டு இயக்கங்களைத் தீவிர நிலைக் மேலும்